அமெரிக்காவின் நியூயோர்க் நகரப்பகுதியில் சிறிய சிறகுகள் கொண்ட பூச்சிகளின் கூட்டம் நகரத்தை ஆக்கிரமித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக நியூயோர்க்கின் மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிகளை சுற்றி பெருமளவில் காணப்படும் இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நியூயோர்க் நகரில் உள்ள சுரங்கப்பாதைகளிலும் இவை ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வானிலை மாற்றத்தின் விளைவுஇந்நிலையில், அமெரிக்காவின் சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், "இந்த பூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவை க்னாட்ஸ் (gnats- ஒருவகை கொசு) அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இந்த திடீர் அஃபிட்ஸ் தாக்குதல் அபூர்வமானது என்றாலும், இது வானிலை மாற்றத்தின் விளைவு என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பூச்சிகளால் பொது சுகாதார அபாயம் எதுவுமில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள நியூயோர்க் நகர சுகாதாரத்துறை, "நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
ஏதேனும் முக்கியமான சுகாதார தகவலிருந்தால் அதனை பகிர்ந்து கொள்வோம்" என செய்தி வெளியிட்டிருக்கிறது.
மேலும், இந்த பூச்சிகளின் படையெடுப்புக்கு காரணம் அதிகரித்து வரும் வெப்பம், ஈரப்பதம் மற்றும் சமீபத்திய மழை ஆகியவற்றால் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
©24 HourS New NewS
--2️⃣4️⃣HNN-- --2️⃣4️⃣HNN-- ---2️⃣4️⃣HNN---
உங்களுக்கு தெரிந்த உண்மைத் தன்மையான தகவல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்...
மிகக் குறைந்த விலையில் விளம்பரங்களை பகிர்வதற்கு. *ADMIN* OF 2️⃣4️⃣ HOURS NEW NEWS +94 75 475 4879
_OUR OFFICIAL OTHER LINKS_
ஒரே தகவல்களே எல்லா வாட்சப் *குழுமத்திலும் பகிரப்படுவதால் ஒருவர் ஒரு குழுமத்தில் மாத்திரம் பயணிக்கவும்**
2️⃣4️⃣HourS 4️⃣New NewS*
https://chat.whatsapp.com/L1BLpe0Jy9GII7vyPvOlht
*OFFICIAL FACEBOOK PAGE*
https://www.facebook.com/24HoursNewNewsOffcl/
*OFFICIAL WEBSITE*24hoursnewnews.blogspot.com_*©2️⃣4️⃣ HourS New NewS*_https://wa.me/94754754879