How To Make Amla Juice For Controlling Blood Sugar Levels :
நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது என்பது நமக்குத் தெரியும். ஆனால் நெல்லிக்காயை தினமும் சாப்பிடலாமா, அதனால் வேறு விளைவுகள் வருமா என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு இருக்கலாம் . அனால் நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய தினசரி உணவில் நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் 2 நெல்லிக்காய் வீதம் தொடர்ச்சியாக 48 நாட்கள் எடுத்துக் கொண்டால் வந்தால் கீழ்வரும் எல்லா விஷயங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைக்கும்.
நெல்லிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஏராளமான மினரல்களும் இருக்கின்றன. அதனால் தான் நெல்லிக்காயை சூப்பர் ஃபுட்ஸ் என்று அழைக்கிறோம். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காயை காயகல்ப மூலிகைகளில் ஒன்றாக சொல்வார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்கள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்வதன் மூலம் கீழ்வரும் நன்மைகள் கிடைக்கும்.