இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை
சென்னை
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் டெல்லி ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேசினர். இருநாட்டு பிரச்சினை மற்றும் முக்கிய முடிவுகளை பற்றி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.( 24 HOUR NEW NEWS )
இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பு ‘ரா’ தன்னை கொல்வதற்கு சதி செய்ததாக இலங்கை அதிபர் சிறிசேனா கூறினார் என தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அது தவறான தகவல் என்று இலங்கை மறுத்து விட்டது.
கடந்த புதன்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.( 24 HOUR NEW NEWS )
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார்.( 24 HOUR NEW NEWS)
இந்நிலையில், சனிக்கிழமை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை ரணில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பயணத்தின்போது, இந்தியாவின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றி வருகிற திட்டங்களின் நிலவரம் குறித்து ஆராயப்பட்டது.( 24 HOUR NEW NEWS )
இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் உதவியுடன் நிறைவேற்றி வருகிற வீட்டுவசதித் திட்டங்கள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.( 24 HOUR NEW NEWS )
தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதிகளில் அதிகாரப்பகிர்வு செய்வது தொடர்பாக ரனில் விக்ரம சிங்கேயுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதுபற்றி பேசியதாக தகவல் இல்லை.( 24 HOUR NEW NEWS )
இரு தலைவர்கள் சந்தித்துப்பேசும் புகைப்படத்துடன், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “நமது இதயங்களில் இலங்கைக்கு என சிறப்பு இடம் இருக்கிறது. இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளித்தார். பிரதிநிதிகள் மட்டத்திலான கூட்டத்தில், இரு தலைவர்களும் இரு தரப்பு உறவு பற்றி விரிவாக விவாதித்தனர். குறிப்பாக இலங்கையில் நடைபெற்று வருகிற வளர்ச்சிப்பணிகள் பற்றி பேசினர்” என குறிப்பிட்டுள்ளார்.( 24 HOUR NEW NEWS )
ரணில் விக்ரமசிங்கேயும், ராஜ்நாத் சிங்கும் இந்தியா- இலங்கை இடையேயான பாதுகாப்பு பிரச்சினைகள், பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு பற்றி பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.ராஜ்நாத் சிங் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், “இலங்கை பிரதமர் ரனில் விக்ரமே சிங்கேயை டெல்லியில் சந்தித்து பேசினேன். அந்த சந்திப்பு நல்ல முறையில் நடந்தது. பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு வரையிலான பிரச்சினைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பாக நாங்கள் விவாதித்தோம்” என்று கூறி உள்ளார்.
( 24 HOUR NEW NEWS )
ரணில் விக்ரம சிங்கேயை சுஷ்மா சுவராஜ் சந்தித்துப்பேசியபோது இரு தலைவர்களும் இலங்கையில் இந்திய உதவியுடன் நடந்து வருகிற வளர்ச்சிப்பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.இதை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டர் பதிவு ஒன்றில் உறுதி செய்துள்ளார்.( 24 HOUR NEW NEWS )
தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக செய்தி வெளியான நிலையில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.( 24 HOUR NEW NEWS )