2020-03-02
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களின் படி இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்நாயக தெரிவித்தார்.
பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படவுள்ளது.
பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதிப்பகுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுந்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 60 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு 10 - 15 க்கு இடைப்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுமானால் சுமார் 500 மில்லியன் செலவாகும் என்றும் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் தேர்தல் செலவுகளும் அதிகரிக்கும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் மே முதல் வாரத்தில் தேர்தலை நடத்தக் கூடியதாக இருக்கும் என்றும் எனினும் மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் என்பதால் அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி வெளியானதன் பின்னரே வேட்புமனு தாக்கல் , தேர்தலுக்கான தினம் என்பன உறுதியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#24 HOUR SERVICE
#24 HOURS NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING