இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஆர். டேர்னட் செகெர்சியோக்ளு நேற்று (26 பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார். 24 HOURS NEW NEWS
இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த துருக்கி நாட்டின் புதிய தூதுவரை இராணுவ தளபதி வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்று இரு நாடுகளுக்கு இடையில் பல தலைமுறைகளாக தங்கியிருந்த நல்லெண்ணங்களை நினைவு கூர்ந்தார். 24 HOURS NEW NEWS
அத்துடன் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு துருக்கி நாட்டினால் வழங்கப்படும் பயிற்சிகள், ஆதரவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இராணுவ தளபதி புதிய துருக்கி நாட்டின் தூதுவருக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், எதிர்வரும் காலங்களிலும் இலங்கை நாட்டிற்கு தொடர்ந்து இப்படியான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். 24 HOURS NEW NEWS
பதிலுக்கு துருக்கி நாட்டின் தூதுவர் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்பையும் ஏற்றுக் கொண்டு இலங்கையின் வளர்ச்சிக்கு தனது நாட்டின் பாரிய ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் கூறினார்.24 HOURS NEW NEWS
அத்துடன் தனக்கு வழங்கப்பட்ட இச்சந்தர்ப்பத்தை முன்னிட்டு இலங்கைக்கும், இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும் நன்றிகளையும் தெரிவித்தார். 24 HOURS NEW NEWS
பின்பு இராணுவ தளபதியவர்கள் துருக்கி தூதுவருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு இவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக நினைவுச் சின்னமொன்றை இவருக்கு பரிசாக வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். 24 HOURS NEW NEWS
இறுதியில் துருக்கி தூதுவரினால் இராணுவ தளபதியின் பணிமனையிலுள்ள பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் குறிப்பு புத்தகத்தில் கையொப்பமிட்டு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.24 HOURS NEW NEWS
#24 HOUR SERVICE
#24 HOURS NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING